சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை இயக்குநரும், சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநருமான ஃபூ சியாங் சீ மீது ஆபாசக் காணொளிகள் எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் அவர் மீது மோசடி, ஆபாசக் காணொளிகள் வைத்திருந்தது, அனுமதி இல்லாமல் மற்றவர்களை ஆபாசமாக காணொளி எடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.
53 வயது ஃபூ, 2018ஆம் ஆண்டு ஏபரல் முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் வரை அந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஏப்ரல் 2015ஆம் ஆண்டு முதல் ஜூலை 2015ஆம் ஆண்டு வரை ஃபூ அவரது மேற்பார்வையாளரை ஏமாற்றி சூதாட்டத்திற்காக 205,000 வெள்ளி பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.
ஃபூ தற்போது 20,000 வெள்ளி பிணையில் வெளிவந்துள்ளார்.
அவர் மீதான விசாரணை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.