உச்சநிலை பேச்சுவார்த்தை: பயனுள்ள கலந்துரையாடலை எதிர்பார்க்கும் சிங்கப்பூர், சீனா

உச்சநிலை பேச்சுவார்த்தை: பயனுள்ள கலந்துரையாடலை எதிர்பார்க்கும் சிங்கப்பூர், சீனா

1 mins read
95916331-dba8-4baa-845d-3e446811df76
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் நவம்பர் 22ஆம் தேதி தொலைபேசியில் உரையாடினார். - படம்: வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூரும் சீனாவும் உயர்நிலை இருதரப்பு சந்திப்புக் கூட்டத்தை நடத்தவுள்ளன.

இரு நாடுகளும் தங்கள் நீண்டகால, ஆழமான உறவுகளை வலியுறுத்தும் அதேவேளையில் சந்திப்புக் கூட்டத்தில் பயனுள்ள கலந்துரையாடலை எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளன.

இரு நாட்டு உறவுகள் தொடர்பான உச்சநிலை தளமான ‘ஜாயிண்ட் கவுன்சில் ஃபார் பைலேட்டரல் கோஆபரேஷன்’ என்ற மன்றத்தின் வாயிலாக பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் இவ்வாண்டு சீனாவில் நடைபெற உள்ளதாகவும் அந்தக் கூட்டத்துக்கு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், சீன நிர்வாகத் துணைப் பிரதமர் டிங் ஷுவேசியாங் ஆகிய இருவரும் கூட்டாகத் தலைமை தாங்குவர் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், சீனாவுக்கு இடையே அதிகரித்துவரும் விமானப் பயணங்களை இரு நாடுகளும் வரவேற்கும் அதே வேளையில் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையிலான பிணைப்பு வலுப்படும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் வெளியுறவு அமைச்சு நவம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்