விலை உயர்ந்த கலைப் பொருள்களுக்கான ‘ஜிஎஸ்டி’ வரியை நீக்கலாம்: உஷா சந்திரதாஸ்

1 mins read
c0d86dde-af7d-43c5-8d07-90c53811c32f
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நியமன நாடாளுமன்ற உறுப்பினரான உஷா சந்திரதாஸ், விலை உயர்ந்த கலைப் பொருள்களுக்கான பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) நீக்கினால் கலைப் பொருள்கள் விற்பனைகளுக்கு சிங்கப்பூர் ஒரு நடுவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் அந்தக் கருத்தை அவர் பதிவு செய்தார்.

2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கலைப் பொருள்களுக்கான விற்பனை இரு மடங்கு உயர்ந்ததைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வட்டாரத்தில் கலைப் பொருள்களுக்கான விற்பனை நடுவமாக ஹாங்காங் திகழ்கிறது. அங்கு அப்பொருள்களுக்கு ‘ஜிஎஸ்டி’ வரியோ அல்லது வேறு வரியோ இல்லை என்று உஷா சந்திரதாஸ் கூறினார்.

வரியை நீக்குவதன் மூலம் கலைப் பொருள் விற்பனையாளர்களுக்கு செலவுகள் குறையும். ‘ஜிஎஸ்டி’ வரி இருந்தால் கலைப் பொருள்களுக்கான பெரிய ஏல நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு குறைவாகத்தான் கிடைக்கும் என்றார் அவர்.

ஏல நிகழ்ச்சிகள் மூலம் புத்தாக்க பொருளியலுக்கும் ஊக்கம் கிடைக்கும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்