ஓட்டுநர் வயது வரம்பை மறுஆய்வு செய்யக் கோரும் கோஜெக் சிங்கப்பூர்

ஓட்டுநர் வயது வரம்பை மறுஆய்வு செய்யக் கோரும் கோஜெக் சிங்கப்பூர்

1 mins read
bc285738-0aa2-4598-95da-c395e86afce1
கோஜெக் சிங்கப்பூரின் பொது மேலாளர் லியன் சூங் லுயென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வாடகை கார் சேவை வழங்கும் கோஜெக் சிங்கப்பூர் நிறுவனத்தின் பொது மேலாளர் லியன் சூங் லுயென், தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான வயது வரம்பைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

வாடகை கார் பகிர்வுச் சேவைக்கான தேவை அதிகமிருக்கும் நிலையில், இத்தகைய நடவடிக்கை கூடுதலான ஓட்டுநர்கள் சேவையில் இணைய வழிவகுக்கும் என்றார் அவர்.

சிங்கப்பூரில் கோஜெக் நிறுவனம் செயல்படத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்ச்சி நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. அதில் அவர் உரையாற்றினார்.

சிங்கப்பூரில் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் குறைந்தது 30 வயது நிரம்பியவர்களாக இருப்பது கட்டாயம். அவர்கள் சிங்கப்பூரர்களாக இருப்பதும் அவசியம். 2020 செப்டம்பரில் இந்த விதிகள் நடப்புக்கு வந்தன.

கொவிட்-19 கிருமிப் பரவல் சூழலில் அத்தகைய கார் சேவைக்கான தேவை குறைவாக இருந்தது.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் தேவை மேம்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அன்றாட கார் பகிர்வுச் சேவைகளின் எண்ணிக்கை 538,000ஆகப் பதிவாகியுள்ளது.

தற்போது தேவை அதிகரித்துள்ள நிலையில் ஓட்டுநர் பற்றாக்குறையால் இந்தத் துறை சிரமத்தை எதிர்கொள்கிறது.

குறிப்புச் சொற்கள்