தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் உற்பத்தித் துறை அக்டோபர் மாதம் 4% வளர்ச்சி

2 mins read
ade23489-6f42-4d34-9540-094e71bc0d8f
மின்னியல் தொழிற்சாலை - படம்: எஸ்பிஎச் கோப்புப் படம்

சிங்கப்பூர் உற்பத்தித் துறை 12 மாத தொடர் வீழ்ச்சிக்குப் பின் அக்டோபர் மாதம் 4% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த வளர்ச்சியை மின்னியல் துறை, குறிப்பாக பகுதி மின்கடத்தி துறை, முன்னெடுத்துச் சென்றது.

ஆண்டு அடிப்படையில் உற்பத்தித் துறையின் மொத்த வளர்ச்சி 7.4 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்களை நவம்பர் 24ஆம் தேதியன்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டது.

அதிக ஏற்ற இறக்கம் கண்ட உயிர்மருத்துவ துறை உற்பத்தியைத் தவிர்த்துப் பார்த்தால் அக்டோபர் மாத உற்பத்தி 7.3 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

பருவத்திற்கேற்ப மாத அடிப்படையில் சரிசெய்யப்பட்ட நிலையில் செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் அக்டோபர் மாத வளர்ச்சி 9.8 விழுக்காடாக பதிவாகியுள்ளது.

இதையே உயிர்மருத்துவ துறை உற்பத்தியை தவிர்த்துப் பார்த்தால் அக்டோபர் மாத வளர்ச்சி 4.4 விழுக்காடு

உற்பத்தித் துறையின் இந்த வளர்ச்சியை மின்னியல் துறை முன்னெடுத்துச் சென்றது. உள்நாட்டு உற்பத்தியில் மின்னியல் துறையின் பங்கு 20% என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆண்டு அடிப்படையில் மின்னியல் உற்பத்தி 14.8% வளர்ச்சியடைந்தது. இதில் பகுதி மின்கடத்தித் துறையின் வளர்ச்சி 17.8 விழுக்காடு.

மின்னியல் உற்பத்தித் துறை, சில்லு உற்பத்தித் துறை ஆகியவை தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வளர்ச்சியடைந்துள்ளன.

எனினும், மற்ற மின்னியல் துறைப் பிரிவுகள் 2.4% வீழ்ச்சியை சந்தித்தன. அத்துடன் கணினி உபகரணங்கள், தரவு சேமிப்புத் துறை ஆகியவை 10.3 விழுக்காடு சுருங்கின.

இவற்றுடன், உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு போக்குவரத்து பொறியியல் துறையின் 12% வளர்ச்சி முட்டுக் கொடுத்தது.

குறிப்புச் சொற்கள்