தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின் சிகரெட்டுகள்: ஆடவருக்கு அபராதம்

1 mins read
d89c21d6-4b60-407f-bfb6-2ca8a7026941
மின் சிகரெட்டுகள். - படம்: சுகாதார அறிவியல் ஆணையம்

வெஸ்ட் மால் கடைத்தொகுதியில் உள்ள ஹார்வி நோர்மன் கடையில் 36 வயது ஆடவரிடம் நூற்றுக்கணக்கான மின் சிகரெட்டுகளும் அதை வைத்திருக்கக்கூடிய கலன்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவருக்கு $13,700 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற பொருள்களை விற்றதன் பயனாக தான் $10,000 ஈட்டியதாக மார்க்கஸ் சென் ஜுன் மிங் என்ற ஆடவர் ஒப்புக்கொண்டார்.

இதன் தொடர்பில் அப்பகுதியில் மாணவர்களுக்கு மின் சிகரெட்டுகள் விற்கப்படுவதாக துப்புக் கிடைத்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்று வெஸ்ட் மால் கடைத்தொகுதியில் உள்ள ஹார்வி நோர்மன் கடையில் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பொழுது கைதான சென்னிடம் ஒவ்வொன்றிலும் மூன்று கலன்கள் அடங்கிய 75 பெட்டிகள் இருந்ததும், ஒரு கலனில் 110 மின் சிகரெட்டுகள் இருந்தததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சில கலன்கள் கடையிலுள்ள அவரது தனிப்பட்ட பெட்டகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர் இரவு 8.00 மணிக்கு ஆணைய அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டபோது அங்கு 409 மின் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பொருள்கள் தம்முடையதுதான் என்று ஒப்புக்கொண்ட சென் அவை யாவும் தமது சொந்தப் பயன்பாட்டுக்காக என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்