ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மற்றும் முஸ்லிம் லீக் சிங்கப்பூர் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மொழி மற்றும் இலக்கியப் பிரிவான இளம்பிறை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் பேசும் கலை வளர்ப்போம் மாதாந்திர நிகழ்ச்சி மூத்த சமூக அடித்தளத் தலைவர் புதிய நிலா மு. ஜஹாங்கீர் தலைமையில் நவம்பர் 18ஆம் தேதி ஜாலான் புசார் சமூக மன்ற அறையில் நடைபெற்றது. சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்ற ஆலோசகர் திருமதி மாலதி பாலாவும் எடுகுவஸ்ட் கல்வி பயிற்சி நிறுவன தலைமை நிர்வாகி திரு இத்ரீஸ் மாலிம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாணவர்கள், இளையர்களின் சிற்றுரைகளுக்குப் பின்னர் சிறப்புப் பேச்சாளர் வாழ்நாள் கல்வி பற்றியும், சிங்கப்பூர் அரசாங்கத்தின் கட்டணக்கழிவு மற்றும் ஊக்குவிப்பு குறித்தும் விளக்கமான விழிப்புணர்வு உரை வழங்கினார். தீபாவளிப் பண்டிகை கொண்டாட்ட உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் தீபாவளிக் கொண்டாட்டம் பற்றிய மகிழ்ச்சிகளும் பகிரப்பட்டன.
மாணவர்கள், இளையர்கள், குடியிருப்பாளர்கள் என சுமார் நாற்பது பேர் கலந்து கொண்ட அந்நிகழ்வு தொடர்ந்து மாணவர்கள், இளையர்களை மேடையில், அரங்கில் தமிழில் பேச ஊக்கப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செயலாளர் திரு கார்த்திக், உதவித் தலைவர் திருமதி மஹ்ஜபீன், செயலவை உறுப்பினர் திருமதி இசக்கிச் செல்வி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

