‘த அஃபோர்டபல் ஆர்ட் ஃபேர்’ என்ற கலைக் கண்காட்சி நவம்பர் 10ஆம் தேதியிலிருந்து 12ஆம் தேதிவரை எஃப் 1 கார் பந்தயக் கட்டடத்தில் நடைபெற்றது.
அதில், சாதனை அளவாக $5 மில்லியன் பெறுமானமுள்ள காட்சிப் பொருள்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே கண்காட்சியில் 2022ஆம் ஆண்டு $4.5 மில்லியன் மதிப்பிலான பொருள்களும், 2019ஆம் ஆண்டு $3.4 மில்லியன் பெருமானமுள்ள பொருள்களும் விற்பனையானதாக கூறப்படுகிறது.
இந்தக் கண்காட்சித் திட்டத்தின் இயக்குநரான 40 வயது ஆலன் கோ, “இவ்வாண்டு கண்காட்சியின் வெற்றி எண்ணிக்கையை மட்டும் குறிக்கவில்லை. கலைக் கண்காட்சிக் கூடங்கள், ஓவியர்களின் வாழ்வாதாரம் ஆகியவர்களுக்கு கிடைத்துள்ள ஆதரவின் பிரதிபலிப்பு.
“அத்துடன், இந்தக் கண்காட்சி சிங்கப்பூர் கலைகள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் பிரதிபலிப்பும்கூட,” என்று சொன்னார்.
இந்தக் கண்காட்சி இவ்வாண்டு 16வது முறையாக இடம்பெற்றது. இதற்கு பெருகி வரும் வருகையாளர்களாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள், வழக்கமாக வரும் வெளிநாட்டவரையும் சேர்த்து 16,000 பேர் வந்ததாகக் கூறப்படுகிறது.

