பெண்டமியர் சந்தையில் தீ விபத்து; இருவர் காயம்

பெண்டமியர் சந்தையில் தீ விபத்து; இருவர் காயம்

1 mins read
1c111b5b-5b65-4451-a11f-01e14e8e8c6d
பெண்டமியர் சந்தை, உணவு நிலையத்தில் உள்ள சைவ உணவுக் கடையில் தீ மூண்டது. - ஷின் மின்

பெண்டமியர் சந்தையில் நிகழ்ந்த தீ விபத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை(எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது.

நவம்பர் 25ஆம் தேதி பெண்டமியர் சந்தை, உணவு நிலையத்தில் தீ மூண்டிருப்பதாக காலை 5.40 மணிக்கு தகவல் கிடைத்ததாக அது கூறியது.

அங்கு வந்த தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் நுரையைத் தூவியும் தீயை அணைத்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மற்றொருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக எஸ்சிடிஎஃப் தெரிவித்தது.

குளிர்பானக் கடையின் உரிமையாளருக்கு கைகளில் சிராய்ப்புக் காயம் ஏற்பட்டதாகவும் நூடல்ஸ் கடையின் உதவியாளருக்கு கைகளிலும் முகத்திலும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.

சைவ உணவுக் கடையில் தீ மூண்டதாகவும் அந்த சீன நாளிதழ் தெரிவித்தது.

காலையில் பெரும்பாலான கடைக்காரர்கள் கடையைத் திறந்து தயாரானபோது உதவி கேட்டு அழுகுரல் கேட்டது. இருபதுக்கும் மேற்பட்டோர் உதவிக்கு ஓடினர். குளிர்பானக் கடையில் வேலை செய்த ஒருவர் தீயை அணைக்கும் சாதனத்தை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சிலர் எஸ்சிடிஎஃபுக்கு தகவல் தெரிவித்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ஷின் மின் மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்