பயன்படுத்தாத சிடிசி பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் நன்கொடையாக வழங்கலாம்

1 mins read
293bc425-4bea-4a98-8df1-255c4341505b
சிங்கப்பூரர்கள் தாங்கள் பயன்படுத்தாத சிடிசி பற்றுச்சீட்டுகளை டிசம்பர் 1 முதல் நன்கொடையாக வழங்கலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 2023 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தாமல் இருந்தால், அவற்றை டிசம்பர் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நன்கொடையாக வழங்கலாம்.

அவரவர் தெரிவுசெய்யும் நன்கொடை அமைப்பை அவர்களின் சிடிசி பற்றுச்சீட்டுகள் சாரும் என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் திங்கட்கிழமையன்று (நவம்பர் 27) தெரிவித்தார்.

இதேபோல் 2021, 2022 ஆண்டுகளில் சிங்கப்பூரர்கள் தங்களின் $1.19 மில்லியன் மதிப்பிலான சிடிசி பற்றுச்சீட்டுகளை நன்கொடை அளித்ததால் 245 நன்கொடை அமைப்புகள் பலனடைந்தன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நன்கொடைத் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 9,880 சிங்கப்பூரர் கொண்ட குடும்பங்கள் தங்களின் சிடிசி பற்றுச்சீட்டுகளை நன்கொடையாக வழங்கியிருந்தன.

குறிப்புச் சொற்கள்