வரும் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் 12 ஈசூன் அவென்யூ 5ல் உள்ள நாராயண மிஷன் வளாகத்தின் முதல் தளத்தில் யூசுப் ராவுத்தர் ரஜித் எழுதிய ‘வேர்களைத் தழுவும் விழுதுகள்’ எனும் நூல் வெளியீடு காணவிருக்கிறது.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஆதரவில் நடைபெறும் இந்த நிகழ்வில் பெறப்படும் நிதி அனைத்தும் நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நன்கொடையாக வழங்கப்படவிருக்கிறது.
ஸ்ரீ நாராயண மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ் தேவேந்திரன் வரவேற்புரை வழங்க, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமைச் சந்திரன், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் இந்த நன்கொடைத் திரட்டு நிகழ்வு பற்றி பேசுவார்.
தொடர்ந்து நூல் அறிமுக நிகழ்ச்சியை தமிழில் திருவாட்டி வானதி பிரகாஷும், ஆங்கிலத்தில் திரு ராஜா மோகனும் வழங்குவார்கள்.
சிறப்பு விருந்தினரின் உரைக்குப்பின் நூல் வெளியீடு நடைபெறும். ஸ்ரீ நாராயண மிஷனின் துணைத் தலைவர் திருவாட்டி சரளாராமன் நன்றியுரை வழங்குவார்.

