‘லாங் ஐலண்ட் திட்டம் கடல் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யவும்’

‘லாங் ஐலண்ட் திட்டம் கடல் உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்யவும்’

1 mins read
a5b83b3d-9099-421d-8c4a-187b0fbb4192
‘லாங் ஐலண்ட்’ தீவின் ஒரு பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த பொறியியல், இயற்கை சார்ந்த தீர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். - படம்: நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையம்

ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் கடலுயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கை முதல் நாளில் இருந்தே நடைபெற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

‘லாங் ஐலண்ட்’ தீவை உருவாக்கும் நடவடிக்கை, ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் ஆமைகள், பவளப்பாறைகள், கடல் புற்களைப் பாதிக்கும் அபாயம் மட்டுமின்றி தென்தீவுகளில் இருக்கும் வளமிக்க கடலுயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் சுட்டினர்.

‘லாங் ஐலண்ட்’ தீவின் ஒரு பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த பொறியியல், இயற்கை சார்ந்த தீர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சோவ் லோக் மிங் கூறினார்.

இதன்மூலம் எதிர்காலத்தில் நிலத்தை மீட்கும் பணிகள், கடலுரியினங்கள் இடம்பெயருவதற்கு உகந்ததாக அமையும் என்றார் அவர்.

சதுப்புநிலங்களையும் செயற்கை பவளப்பாறைகளையும் கட்ட நிபுணர்கள் பரிந்துரைத்தனர். கடல்நீர் மட்டம் உயர்வதிலிருந்து இது பாதுகாக்கும்.

ஐந்து ஆண்டுகால சுற்றுப்புற, பொறியியல் ஆய்வுகளின் ஒரு பகுதியாக புத்தாக்கமிக்க, செலவுக் கட்டுப்படியான இயற்கை சார்ந்த தீர்வுகள் ‘லாங் ஐலண்ட்’ தீவுக்காக ஆராயப்படும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்