ஈசூனில் மரத் தண்டைக் கொண்டு சென்ற லாரி ஒன்று பக்கவாட்டில் சாய்ந்து விழுந்து தனியார் பேருந்தின் மீது செவ்வாய்க்கிழமை மோதிய விபத்தில் இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எண் 2 ஈசூன் அவென்யூ 7 அருகே காலை 7.20 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.
34 வயது ஆண் லாரி ஓட்டுநரும் 35 வயது பெண் பேருந்துப் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர். அந்த லாரி ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருகிறார்.
வேறொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் ஆனால் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.