ஆட்குறைப்பு செய்யும் ‘டைகர் பியர்’

ஆட்குறைப்பு செய்யும் ‘டைகர் பியர்’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Nov 2023 - 7:34 pm

1 mins read

பிரபல ‘டைகர் பியர்’ மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் ஏறத்தாழ 30 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது.

‘ஆசிய பசிபிக் புருவரிஸ் சிங்கப்பூர்’ மேற்கொண்டுள்ள மிக அண்மைய மறுகட்டமைப்புத் திட்டத்தின்கீழ் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர் ஒருவர், தமக்கு நவம்பர் 23ஆம் தேதியன்று தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அன்றைய தினமே தமது பொருள்களை எடுத்துக்கொண்டு நிறுவன வளாகத்தை விட்டுத் தாம் செல்ல வேண்டும் எனக் கூறப்பட்டதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் வழங்கிய பணிநீக்கக் கடிதத்தில், வேலைக்கான இறுதி நாள் டிசம்பர் 31 எனக் குறிப்பிடப்பட்டதாக அறியப்படுகிறது.

இதற்கிடையே, ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்