பொதுப் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிள்

பொதுப் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிள்

1 mins read
b893dd0c-0096-426f-9297-327a3c43a851
எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட மோட்டார்சைக்கிள். - படம்: எஸ்ஜிரோட் புளோக்ஸ்/டெலிகிராம்
Google News Preferred Icon

பாசிர் ரிசில் திங்கட்கிழமை எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்துக்கு அடியில் மாது ஒருவரின் மோட்டார்சைக்கிள் சிக்கிக்கொண்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

டெலிகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட படம் ஒன்றில், அப்பேருந்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

பாசிர் ரிஸ் ஸ்திரீட் 11, பாசிர் ரிஸ் ஸ்திரீட் 12 சந்திப்பில் பேருந்துக்கும் மோட்டார்சைக்கிளுக்கும் இடையே விபத்து ஏற்பட்டது குறித்து திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் காவல்துறை கூறியது.

30 வயது பெண் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் கூறிய காவல்துறை, பேருந்து ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகச் சொன்னது.

குறிப்புச் சொற்கள்