உரிமம் இல்லாது விரைவுச்சாலையில் வேகமாக ஓட்டிய ஆடவர்

உரிமம் இல்லாது விரைவுச்சாலையில் வேகமாக ஓட்டிய ஆடவர்

1 mins read
006dcc8f-e9f7-4665-aa7e-86a4e3137d19
ஜேமஸ் டான் லே சுவான் 80 மணி நேரத்துக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. - படம்: தமிழ் முரசு

வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையிலும் தமது நண்பரின் கெட்கோ கார் பகிர்வுக் கணக்கைப் பயன்படுத்தி காரை வாடகைக்கு எடுத்து விரைவுச்சாலையில் வேக வரம்பையும் தாண்டி மணிக்கு 123 கிலோமீட்டர் வேகத்தில் கார் ஓட்டிய ஆடவர் போக்குவரத்து காவல்துறையினரிடம் சிக்கினார்.

இதுபோன்று அவர் ஏழு மாதக் காலத்துக்குக் கிட்டத்தட்ட 45 தடவை செய்ததாக அறியப்படுகிறது.

22 வயது ஜேமஸ் டான் லே சுவான் 15 மாதங்களுக்குக் கண்காணிப்படுவார்.

அத்துடன் அவர் 80 மணிநேரத்துக்கு சமூக சேவையில் ஈடுபட வேண்டும்.

மேலும், கண்காணிப்புக் காலக்கட்டத்தின்போது அவர் வாகனங்கள் ஓட்ட முடியாது.

கெட்கோ நிறுவனத்தை ஏமாற்றியது, உரிமம் இல்லாத வாகனம் ஓட்டியது, காப்புறுதித் திட்டம் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றங்களை டான் ஒப்புக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்