ஆகப்பெரிய பண மோசடியில் தொடர்புடைய சந்தேக நபர் மீது ஓசிபிசி வழக்கு

சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணமோசடி விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபர் மீது ஓசிபிசி வங்கி வழக்குத் தொடுத்துள்ளது.

இந்த வழக்கு, இழப்புகளை மீட்பதற்காக கடன் வழங்கும் நிறுவனம் எடுத்திருக்கும் முதல் முயற்சி எனக் கருதப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவின் ஆகப்பெரிய வங்கியான ஓசிபிசி, நவம்பரில் கம்போடியா பாஸ்போர்ட் வைத்திருக்கும் சு பாவோலின் மீது சுமார் 19.7 மில்லியன் வெள்ளி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளது. இதில் பெரும்பாலன தொகை வீட்டு அடைமானக் கடன் தொடர்பானது.

டிசம்பர் 1ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற ஆவணங்களைப் பார்த்த புளூம்பெர்க் இந்த விவரங்களை வெளியிட்டது.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் மோசடி தொடர்பில் சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட சீனாவில் பிறந்த பத்து தனிப்பட்டவர்களில் சுவும் ஒருவர்.

‘செந்தோசா கோவ்’இல் கட்டப்பட்டு வரும் அடைமானப் பங்களாவை பறிமுதல் செய்ய நீதி மன்றத்தில் ஓசிபிசி மனுத் தாக்கல் செய்துள்ளது.

வீட்டுக் கடன் 19.5 மில்லியன் வெள்ளி, அதற்கான வட்டி, கடன் அட்டை மூலம் செலவழிக்கப்பட்ட $220,570 ஆகியவற்றை சு செலுத்த வழக்கில் ஓசிபிசி கோரியுள்ளது.

வழக்குத் தொடர்பில் கருத்து தெரிவிக்க ஓசிபிசி மறுத்துவிட்டது.

ஆனால் வழக்குத் தொடுத்திருப்பது பற்றிய ஆவணங்களை சுவுக்கு வழங்க இரண்டு முறை முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அவரது முகவரியில் உள்ள இண்டர்காமில் யாரும் பதிலளிக்கவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் சு கைது செய்யப்படுவதற்கு முன்பு செந்தோசா கோவில் நீச்சல் குளத்துடன் இரண்டு மாடி வீடு கட்டுவதற்கான திட்ட வரைபடத்தை சமர்ப்பித்திருந்ததாக நவம்பரில் பிசினஸ் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

மார்ச் 2021ல் அந்த சொத்தை $39.33 மில்லியனுக்கும் சற்று அதிகமாக தொழிலதிபர் லிம் சின் ஹுவாட்டிடமிருந்து சு வாங்கியிருந்தார். ஓஷன் டிரைவ் வழியாக 1,816.3 சதுர மீட்டரில் அந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து கடல் மற்றும் மரினா பே சேண்ட்சை நேரிடையாக ரசிக்க முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!