வீவக வீட்டு வாடகை இரண்டாண்டு இல்லாத குறைவு; தனியார் அடுக்குமாடி வீட்டு வாடகை 0.2% குறைவு

வீடமைப்பு வீட்டு வாடகை அக்டோபர் மாதம் 0.4% வீழ்ந்தது. இந்த வீழ்ச்சி கடந்த இரண்டாண்டுகளில் காணாத ஒன்று என்றும் கூறப்படுகிறது.

புதிய வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.

ஆகக் கடைசியாக வீவக வீட்டு வாடகை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குறைந்தது. அப்பொழுது அது 0.2% குறைந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே, அக்டோபர் மாதம் கூடுதல் வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாக 99.co என்ற இணையவாசல் தகவல், எஸ்ஆர்எக்ஸ் எனப்படும் சிங்கப்பூர் சொத்து சந்தை பரிவர்த்தனை அமைப்பு ஆகியவற்றின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதம் 2,830 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன என்றும் இது செப்டம்பர் மாதத்தைவிட 2.4% அதிகம் என்றும் கூறப்படுகிறது.

ஆண்டு அடிப்படையில் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் நிலவரத்துடன் ஒப்பிடும்போது இவ்வாண்டு அக்டோபர் மாதம் கூடுதலாக 14.9% வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

மற்றொரு நிலவரத்தில், கொண்டோமினிய வீட்டு வாடகை மூன்றாவது மாதமாக தொடர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்த வீழ்ச்சி அக்டோபர் மாதம் 0.2 விழுக்காடாக இருந்தது கூறப்படுகிறது. எனினும், ஆண்டு அடிப்படையில் வாடகை 10.8% அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்துடன், குறைந்த அளவிலான கொண்டோமினிய வீடுகளே அக்டோபர் மாதம் வாடகைக்கு விடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு அக்டோபர் மாதம் 5,402 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாகவும் ஒப்புநோக்க செப்டம்பர் மாதம் 5,713 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாகவும் தெரியவருகிறது. இதனால், அக்டோபர் மாதம் 5.4% குறைவான கொண்டோமினிய வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது தெரிகிறது.

பொது, தனியார் வீட்டுச் சந்தையில் அதிகப்படியான வீடுகள் வாடகைக்கு இருப்பதால் வீட்டை வாடகைக்கு எடுப்போர் குறைவான வாடகை ஒப்பந்தத்தை கேட்டுப் பெற முடிவதாக சொத்துச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!