தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உட்லண்ட்சில் நான்கு வாகன விபத்து; டாக்சி ஓட்டுநர் மருத்துவமனையில்

1 mins read
79044fe9-2600-4fbe-a4d2-551e7b2ad55a
விபத்துக்குப் பிறகு அந்த சாம்பல் நிற காரின் முன்பகுதி நசுங்கியது. - படம்: Fiziepj/டிக்டாக்
multi-img1 of 2

உட்லண்ட்சில் நவம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் காயமுற்ற 62 வயது டாக்சி ஓட்டுநர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

இரண்டு கார்கள், ஒரு டாக்சி, ஒரு லாரி இந்த விபத்தில் சம்பந்தப்பட்டன.

டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதைக் காட்டியது. சாம்பல் நிற கார் ஒன்று, முன்னால் நின்ற லாரிமீது மோதியது. இதன் விளைவாக அந்த லாரிக்கு முன்னால் இருந்த காரும் அதற்கு முன்னால் இருந்த டாக்சியும் மோதப்பட்டன.

விபத்துக்குப் பிறகு அந்த சாம்பல் நிற காரின் முன்பகுதி நசுங்கியது. அதற்கு முன்னால் இருந்த லாரி மற்றும் டாக்சியின் பின்பகுதி சேதமுற்றது.

அட்மிரல்டி ரோடு வெஸ்ட்டை நோக்கிச் செல்லும் உட்லண்ட்ஸ் அவென்யூ 10ல் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து நவம்பர் 29ஆம் தேதி இரவு 8.05 மணியளவில் தங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது டாக்சி ஓட்டுநர் சுயநினைவுடன் இருந்ததாகக் காவல்துறை கூறியது.

இந்த விபத்தில் 31 வயது ஆண் லாரி ஓட்டுநருக்கும் 29 வயது ஆண் கார் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல அவர்கள் மறுத்துவிட்டனர்.

அந்த 29 வயது கார் ஓட்டுநர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

View post on TikTok
குறிப்புச் சொற்கள்