சிங்கப்பூர் உற்பத்தி நடவடிக்கை அதிகரிப்பு

சிங்கப்பூர் உற்பத்தி நடவடிக்கை அதிகரிப்பு

1 mins read
03c0d8f3-2daa-4444-ae1f-5da30940657c
ஆறு மாத காலத்துக்கு சரிந்து வந்த உற்பத்தி நடவடிக்கை மீண்டுவரும் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் உற்பத்தி நடவடிக்கை தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்துள்ளது.

அதற்கு முன்பு ஆறு மாத காலம் உற்பத்தி நடவடிக்கைகள் சரிந்து வந்தது; அதனைத் தொடர்ந்து இத்துறை மீண்டுவரும் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி நடவடிக்கையின் அளவைக் கணக்கிடும் பிஎம்ஐ (பர்ச்சேசிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ்) குறியீடு நவம்பர் மாதம் 50.3ஆகப் பதிவானது. அக்டோபர் மாதம் இக்குறியீடு 50.2ஆக இருந்தது.

பிஎம்ஐ குறியீடு 50க்குக்கீழ் பதிவானால் உற்பத்தி நடவடிக்கை சுருங்கியதாக அர்த்தம். 50 மேல் பதிவாகும் குறியீடு உற்பத்தி நடவடிக்கை அதிகரிப்பதைக் குறிக்கும்.

புதிய ஏற்றுமதிகள், உற்பத்தித் திறன் போன்றவை நவம்பர் மாதத்துக்கான உற்பத்தி நடவடிக்கை அதிகரித்ததற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

15 மாதங்களாக சரிந்துவந்த மின்சாரப் பொருள்கள் துறைக்கான பிஎம்ஐ குறியீடு 0.2 அதிகரித்து நவம்பர் மாதம் 50.1ஆகப் பதிவானது. அக்டோபர் மாதம் இத்துறைக்கான குறியீடு 49.9ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்