பாலித் தீவு விடுதியில் சிங்கப்பூர்க் குடும்பம் உறங்கியபோது நிகழ்ந்த கொள்ளை

பன்னிரண்டு பேர் அடங்கிய குடும்பத்தார் விடுமுறைக்காக சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குச் சென்றனர்.

அங்குள்ள ஓய்வு விடுதியில் அவர்கள் இரவு உறங்கிய பின்னர் நவம்பர் 30ஆம் தேதி காலையில் எழுந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

S$3,000 பெறுமானமுள்ள ரொக்கம், பைகள், பணப்பைகள் உள்ளிட்ட தங்கள் உடைமைகள் மாயமானதை அவர்கள் உணர்ந்தனர்.

‘வில்லா கென்ஸா’ எனும் அந்த விடுதியின் கண்காணிப்புக் கருவியில் பதிவான காணொளியில், விடுதியைச் சுற்றியுள்ள தாழ்வான சுவர்மீது ஓர் உருவம் ஏறிக் குதிப்பது தெரிந்தது.

அதே இரவு மோட்டார்சைக்கிள் ஒன்று அந்த விடுதியைப் பலமுறை கடந்ததும் மற்றொரு மோட்டார்சைக்கிள் அந்த விடுதியிலிருந்து வெளியேறுவதும் அக்காணொளியில் தெரிந்தது.

அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், பழுதடைந்த கதவு வழியாக திருடன் விடுதிக்குள் நுழைந்ததாகச் சொன்னார். ஆனால், விடுதி நிர்வாகமோ அக்கதவு ஒழுங்காக வேலை செய்ததாகவும் இரவில் அக்குடும்பம் கதவைப் பூட்டவில்லை என்றும் கூறியது.

கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அக்குடும்பம் பாலித் தீவில் காவல்துறையிடம் புகார் அளித்தது.

நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதிவரை பாலித் தீவுக்குச் சென்ற அக்குடும்பத்தில் இரு முதியவர்கள் உட்பட ஒன்பது பெரியவர்கள், மூன்று சிறார்கள் இருந்ததாக 28 வயது தொழில்நுட்ப நிபுணரான திரு ரேதா இந்திரா கூறினார்.

நவம்பர் 30ஆம் தேதி காலை எழுந்தபோது, உணவருந்தும் பகுதிக்குப் பக்கத்தில் பைகள் திறந்திருந்ததையும் அவற்றில் உடைமைகள் மாயமானதையும் திரு ரேதாவின் குடும்பத்தார் கண்டனர்.

“உணவருந்தும் பகுதியில் வைத்து திருடன் எங்கள் உடைமைகளைப் பார்த்ததாகத் தெரிகிறது. அவை அனைத்தும் அறைகளில் இருந்தவை,” என்றார் அவர்.

விடுதியைப் பரிசோதித்த குடும்பத்தார், நீச்சல் குளத்துக்குப் பக்கத்தில் இருந்த சறுக்குக் கதவைச் சாவியால் பூட்ட முடியாததைக் கண்டறிந்தனர். கொள்ளைச் சம்பவத்துக்கு முன்னால் இதுகுறித்து தங்களுக்குத் தெரியாது என்று திரு ரேதா சொன்னார்.

அந்தச் சறுக்குக் கதவு விடுதிக்குள் இட்டுச்செல்கிறது. விடுதியைச் சுற்றியுள்ள தாழ்வான சுவரில் ஏறிக் குதித்து, அக்கதவு வழியாக திருடன் விடுதிக்குள் நுழைந்திருக்கலாம் என திரு ரேதா சந்தேகிக்கிறார்.

“விடுதிக்குப் பாதுகாப்பு எதுவும் இல்லை. விடுதி நிர்வாகி எங்களுடன் தொலைப்பேசி வழியாக மட்டும் பேசினார். எங்களை அவர் வந்து பார்க்கவில்லை,” என்றார் திரு ரேதா.

எனினும், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ‘அஸூர் இன்டர்நேஷனல் பாலி’ விடுதி நிர்வாகம், கதவுகள் மற்றும் ஊழியர்கள் குறித்து திரு ரேதா வழங்கிய தகவல் தவறானது என்றது.

விருந்தினர்கள் வருவதற்கு முன்பும் அவர்கள் புறப்பட்ட பிறகும் சறுக்குக் கதவுகள் ஒழுங்கான நிலையில் இருந்ததாக அது குறிப்பிட்டது.

“கொள்ளைச் சம்பவம் எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. நாங்கள் எவரையும் குறைகூற விரும்பவில்லை,” என்று விடுதி நிர்வாகம் கூறியது.

விருந்தினர்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கும் காப்புறுதி நிறுவனத்துக்கும் தெரியப்படுத்த தான் உதவியதாக அது சொன்னது.

நவம்பர் 30ஆம் தேதி உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளிக்க அக்குடும்பத்தாருடன் சேர்ந்து விடுதி ஊழியர் ஒருவர் சென்றார்.

மேலும் இரு இரவுகள் தங்க கட்டணம் செலுத்தியிருந்தாலும், கொள்ளை நிகழ்ந்த அதே நாள் அக்குடும்பத்தார் அந்த விடுதியிலிருந்து வெளியேறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!