செயற்கை நுண்ணறிவு உருவாக்கம்: உத்தியை மாற்றும் சிங்கப்பூர்

செயற்கை நுண்ணறிவு நமக்கு நன்மை பயக்கக்கூடியது என்பது மட்டுமல்ல, அது பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

உலக நாடுகளுடன் நடைபெறும் போட்டா போட்டியில் சிங்கப்பூரை முன்னுக்குக் கொண்டு செல்லும் பணியில் அறிவிக்கப்பட்ட புதிய செயற்கை நுண்ணறிவு உத்தியை அவர் டிசம்பர் 4ஆம் தேதி அறிவித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அறிவாற்றல் அடிப்படையில் அமைந்துள்ள ஆராய்ச்சி, நிரலிடுதல், எழுத்துப் படைப்பு போன்றவை இடையூறுகளின்றி பாதுகாப்பாக இருக்கும் என கடந்த காலத்தில் கருதப்பட்டது. அந்த நிலை மாறிவிட்டது,” என்று அவர் அண்மையில் செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புகள் குறித்துக் கூறினார்.

குறிப்பிட்டுக் கூறவேண்டுமாயின், ‘சாட்ஜிபிடி’ போன்ற எழுத்து, சித்திரங்கள், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் ஏறக்குறைய மானிட அறிவுக்கு நிகரான ஆற்றலை இணையத்தள தொடர்பிலுள்ள ஒருவரின் கைகளில் சேர்த்துள்ளது என்று துணைப் பிரதமர் வோங் விளக்கினார்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது என்ற திரு வோங், பொதுமக்கள் நன்மைக்காக அதன் பயன்படுத்துவதில் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதே வேளையில், வேலை வாய்ப்புகள், மக்கள் வாழ்வாதாரம் போன்ற அம்சங்கங்களில் அதன் தாக்கத்தைக் குறைக்கவும் வேண்டும் என்று அவர் விளக்கினார்.

சிங்கப்பூரின் இந்தப் புதிய உத்திக்கு ‘நேஷனல் ஏஐ ஸ்ட்ரேடஜி 2:0’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திறன் வளர்ச்சி, துடிப்பான செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதுடன், பொதுமக்கள் நன்மைக்காக, அவற்றை உலக முதன்மைத் தர கட்டமைப்புடனும் ஆய்வுடனும் கட்டிக்காப்பது நமது இலக்கு என்று துணைப் பிரதமர் வோங் விவரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!