போலி சான்றிதழ் தயாரித்த மாதுக்குச் சிறை

போலி சான்றிதழ் தயாரித்த மாதுக்குச் சிறை

1 mins read
615284d2-431c-4194-be9c-2d01fe08e0ba
போலி ஆவணம் தயாரித்த ஃபோன்சேகா வன்னேசெரிகா ஹேம ரஞ்சினி.   - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப் படிப்பை கைவிட்ட ஃபோன்சேகா வன்னேசெரிகா ஹேம ரஞ்சினி என்ற மாது அந்தப் பல்கலைக்கழகத்தில் தான் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றதாக போலி ஆவணம் தயாரித்துள்ளார். அதற்காக அவருக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழை வைத்து அந்த 44 வயது பெண் கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுவரை குறைந்தது ஐந்து நிறுவனங்களை ஏமாற்றி வேலை பார்த்து வந்ததை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

போலி பட்டப்படிப்பு சான்றிதழ் மூலம் ஃபோன்சேகா, வால்ட் டிஸ்னி, மார்ஷல் கேவன்டிஷ், போன்ற நிறுவனங்களில் $4,200க்கும் $6,800க்கும் இடைப்பட்ட சம்பளத்தில் பணியில் சேர்ந்தார்.

2021ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி நிறுவனம் ஃபோன்சேகாவின் சான்றிதழை சரிபார்த்தபோது அவர் மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.

ஜிசிஇ ‘ஏ’ நிலைக் கல்வி தேர்ச்சி மட்டுமே பெற்றிருந்த திருவாட்டி ஃபோன்சேகா, நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கத்தில் பொறியியல் துறையில் பட்டக் கல்வி பயில 1998ஆம் ஆண்டு சேர்ந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கல்வி கற்பதில் சிரமத்தைச் சந்தித்ததால் அந்தப் பாடத் திட்டத்தில் இருந்து வெளியேறினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் 2005ஆம் ஆண்டு அவர் கணினி மூலம் பட்டக் கல்விச் சான்றிதழை வடிவமைத்து பொறியியல் துறையில் இளங்கலை ஹானர்ஸ் பட்டம் பெற்றதாக ஆவணம் தயாரித்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்