தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகன உரிமை சான்றிதழ்: சிறிய, மின்சார கார்கள் தவிர மற்ற கட்டணங்கள் இறக்கம்

1 mins read
b125839d-398f-481f-a1de-e06052a28e25
ஏ பிரிவு சிறிய வகை வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 3.6 % ஏறி $88,020 ஆனது. பெரிய கார்களின் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 3.9% குறைந்து $130,100 ஆனது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம்

டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் சிறிய, குறைந்த சக்தியுடைய கார்கள், மின்சார வாகனங்கள் தவிர மற்றவற்றின் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் வீழ்ந்தன.

ஏ பிரிவு கார்கள், மின்சார வாகனங்களுக்கான உரிமைச் சான்றிதழ் கட்டணம் 3.6% ஏற்றம் கண்டு $88,020 என்ற நிலையை எட்டியது. இதற்கு முந்தைய ஏலத்தில் இந்த ஏ பிரிவு வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் கட்டணம் 85,001 இருந்தது நினைவுகூரத்தக்கது.

வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் உயர்ந்தது இந்த ஒரு பிரிவில் மட்டும்தான்.

பெரிய வாகனங்கள், அதிக திறன்சக்தி உடைய மின்சார வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்ட பி பிரிவு வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் கட்டணம் 3.9% இறக்கம் கண்டு $130,100 ஆக வந்தது. முந்தைய ஏலத்தில் இந்தப் பிரிவு வாகனங்களின் உரிமைச் சான்றிதழ் கட்டணம் $135,336 ஆக இருந்தது.

மோட்டார்சைக்கிள் தவிர அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்தும் பொதுப் பிரிவு வாகனங்களுக்கு உரிமைச் சான்றிதழ் கட்டணம் 1.2% இறங்கி $133,388 என்ற நிலையை எட்டியது. இந்தப் பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ்கள் பெரும்பாலும் பெரிய கார்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றை வாங்கப் பயன்படுத்தப்படுகின்றன.

வர்த்தக வாகனங்களுக்கான கட்டணம் 3.9% வீழ்ந்து $73,889லிருந்து $71,001ஆக நிலைபெற்றது.

மோட்டார்சைக்கிள் உரிமைச் சான்றிதழ் கட்டணம் 1.4% குறைந்து $10,001லிருந்து $9,858ஆக ஆனது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்