சிங்கப்பூருடன் தற்காப்பு விநியோகச் சங்கிலி ஒப்பந்தம் செய்துகொண்ட அமெரிக்கா

சிங்கப்பூரும் அமெரிக்காவும் அண்மையில் விநியோகச் சங்கிலி ஏற்பாடுகள் சார்ந்த தற்காப்பை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

எதிர்பாராது ஏற்படக்கூடிய விநியோகத் தொடர் தடைகளை மேலும் நன்கு சமாளித்திட இரு நாடுகளுக்கும் இந்த இருதரப்பு ஒப்பந்தம் கைகொடுக்கும்.

இந்த ஏற்பாட்டின்படி இரு நாடுகளும் தங்களின் தற்காப்புத் தேவைகளை நிறைவுசெய்வதற்காக அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படும் தொழில்துறை வளங்களைக் கோரலாம் என்று தற்காப்பு அமைச்சு வியாழக்கிழமையன்று (டிசம்பர் 7) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் தற்காப்பு மேம்பாட்டுக்கான நிரந்தரச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் மெல்வின் ஓங், அமெரிக்காவின் கையகப்படுத்துதல், நிலைநிறுத்துதலுக்கான தற்காப்புத் துணைச் செயலாளர் டாக்டர் வில்லியம் ஏ.லாப்ளேண்ட் ஆகிய இருவரும் இந்தப் பிணைப்பற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு வழியாகவும் இந்த ஏற்பாடு விளங்குகிறது.

சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்துவரும் நீண்டகால, இருதரப்பும் பலனடையும் தற்காப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் இந்த ஏற்பாடு எடுத்துக்காட்டுவதாக தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

மேலும், அமெரிக்கத் தற்காப்புத் துறை டிசம்பர் 6ஆம் தேதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி சிங்கப்பூரும் அமெரிக்காவும் அக்டோபரில் புதிதாகப் புத்தாக்கத் தற்காப்புக் கூட்டுறவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டதாகவும் அறியப்படுகிறது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னை அதே தினத்தன்று பென்டகனில் சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் தங்களின் நாடுகளின் இருதரப்பு தற்காப்பு உறவை மறுஉறுதிப்படுத்திக்கொண்டனர்.

அமெரிக்காவின் முக்கியமான தற்காப்புப் பங்காளிகளில் சிங்கப்பூரும் ஒன்று என திரு ஆஸ்டின் குறிப்பிட்டதாக அமெரிக்கத் தற்காப்புத் துறையின் அறிக்கை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!