கூசு தீவு முழுவதும் சூரிய சக்தி மின்சாரம்

கூசு தீவு முழுவதும் சூரிய சக்தி மின்சாரம்

2 mins read
515a3d30-4eff-4cf6-9c81-f81ae528b472
கூசு தீவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்தகடுகள் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டா போ கோங் கோயிலுக்குப் பெயர்போன கூசு தீவு முழுவதும் சூரிய சக்திமயமாகிறது. அதன் தொடக்கமாக டா போ கோயிலும் மலாய் ‘கெராமட்’ புனிதத் தலமும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி சொந்தமாக நீர் மற்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தன்னிறைவைப் பெற்றுள்ளன.

இந்த முயற்சி, புலாவ் ஹந்து தீவுக்கு முன்னோடியாக இருக்கும்.

கூசு தீவின் சூரிய சக்தி மின்சாரமும் நீர் சுத்திகரிப்பு முறையும் 2022ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தீவின் வருடாந்திர புனித யாத்திரை காலத்தின்போது செயல்படத் தொடங்கியது. மேலும் 2023ஆம் ஆண்டில் 22,523 பார்வையாளர்கள் அங்கு வந்தபோது நீர் மற்றும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க முடிந்தது.

இதற்கு மாற்றாக இரண்டு 40 அடி கொள்கலன்களில் சூரிய சக்தியை சேமித்து வைக்கும் மின்கலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு நாட்களுக்குப் போதுமான மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும்.

மழை அல்லது மேகமூட்டமாக இருந்தால் சூரியத் தகடுகளால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆமை தீவு என்றும் குறிப்பிடப்படும் கூசு தீவை சிங்கப்பூர் நில ஆணையம் நிர்வகித்து வருகிறது. இது, வருடாந்திர புனிய யாத்திரை மேற்கொள்ளும் தீவாகவும் இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் கோயில் மற்றும் கெராமட் புனிதத் தலத்திற்கு வருகையளிக்கின்றனர். தீவில் யாரும் நிரந்தரமாகக் குடியிருக்கவில்லை.

இரண்டு காற்பந்து திடல்களுக்கு ஈடான 780 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள சூரியத் தகடுகள் ஒரு மணி நேரத்தில் 230 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஓராண்டுக்கு 52 வீவக நான்கறை வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்திற்கு இது சமம்.

இங்கு சூரியத் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஒரு நாளுக்கு 20,000 லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யும் நீர் சுத்திகரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்