‘கார்டுலைஃப் குழுமம் தொடர்பான புலனாய்வுக்கு மேலும் ஆறு வாரங்கள் பிடிக்கும்’

கார்டுலைஃப் குழும நிறுவனத்தில் உள்ள ஆறு சேமிப்புக் கலன்களில் வைக்கப்பட்டிருந்த தொப்புள்கொடி ரத்தத்தில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டது குறித்த புலனாய்வு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் அது முடிவடைய மேலும் ஆறு வாரங்கள் ஆகும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் டிசம்பர் 8ஆம் தேதி ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கார்டுலைஃப் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கள் குடும்பத்தின் தொப்புள்கொடி ரத்தத்தை மற்ற ரத்த வங்கிகளுக்கு மாற்றிவிடும் தங்கள் கோரிக்கைகளை சற்று ஒத்திவைக்குமாறு பெற்றோர் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

நவம்பர் 30ஆம் தேதி சுகாதார அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஒரு தனியார் தொப்புள்கொடி ரத்த வங்கி தனது வசமிருந்த தொப்புள்கொடி ரத்தம் இருந்த 22 சேமிப்புக் கலன்களில் ஏழு கலன்களில் உள்ள ரத்தத்தை, 2020 நவம்பர் முதல் வெவ்வேறு வெப்பநிலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை தன்னிடம் தெரியப்படுத்தியுள்ளது என்று கூறியது.

தொப்புள்கொடி ரத்தம் வைக்கப்பட்டிருந்த கலன்களில் ஒன்றான ‘A’ கலனில் உள்ள 2,150 வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான 2,200 தொப்புள்கொடி ரத்த அளவுகளில் சேதம் ஏற்பட்டுள்ளதால், அவை ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குத் தோதாக இருக்காது என்று தெரிய வந்தது.

இந்த விதிமீறல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு தமக்கு பல மின்னஞ்சல்களும் குறுஞ்செய்திகளும் வந்தன என்றும் அவற்றைப் பார்க்கையில் பெற்றோர்கள் அது குறித்து வருத்தமும் கவலையும் அடைந்துள்ளனர் என்றும் தெளிவாகத் தெரிந்தது என்றார் திரு ஓங்.

பாதிக்கப்பட்ட ஆறு கலன்களின் வெப்பநிலை மாற்றங்களின் அளவு மற்றும் சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்த அளவுகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கண்டறிவதைத் தவிர, விதிமீறல்களுக்கான காரணங்களைக் கண்டறிய சுகாதார அமைச்சு பணியாற்றி வருகிறது என்றும் அமைச்சர் விவரித்தார்.

கார்டுலைஃப் நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தொப்புள்கொடி ரத்த அளவுகளை மற்றொரு ரத்த வங்கிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெற்றோருக்குப் பதிலளித்த திரு ஓங், தனது அமைச்சு இதர ரத்த வங்கிகளுடன் இணைந்து விதிமீறல்களுக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறது என்றார்.

“இருப்பினும், விதிமீறல்களுக்கான முழுமையான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் வரை, தங்கள் கோரிக்கைகளை பெற்றோர் இப்போதைக்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். காரணம், ஒரு ரத்த அளவு பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குரிய நடைமுறைகளை கார்டுலைஃப் நிறுவனம் வலுப்படுத்திக்கொள்ளலாம். மாறாக, அந்த வங்கியில் உள்ள ரத்த அளவுகள் அனைத்தையும் மற்றொரு வங்கிக்கு மாற்றுவது என்பது மிகப் பெரிய நடவடிக்கை. அதில் மேலும் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது,” என்று திரு ஓங் விளக்கினார்.

பொதுமக்கள், கார்டுலைஃப் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஆகியோரின் உடனடி நலன்களைப் பாதுகாப்பதைத் தவிர, இத்துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தச் சம்பவம் மூலம் படிப்பினைகளைக் கற்றுக்கொள்வதை சுகாதார அமைச்சு உறுதி செய்யும் என்றும் அமைச்சர் ஓங் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!