தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடைகளில் கொவிட்-19 நோய் பரிசோதனை சாதனங்கள் தீர்ந்தன

1 mins read
0b5aa897-a429-41b0-b54a-96d0dc14b368
ஏஆர்டி பரிசோதனை சாதன தொகுப்பு - படம்: எஸ்பிஎச்

கொவிட்-19 நோய் அதிகரித்து வரும் நிலையில் சில மருந்துக் கடைகளில் ஆன்டிஜன் ரேப்பிட் டெஸ்ட் எனப்படும் அந்த பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு தீர்ந்துவிட்டதாக தெரிகிறது.

பீஷான், தோ பாயோவில் உள்ள ஆறு மருந்துக் அங்கிருந்த இந்தப் பரிசோதனை கருவிகள் அடங்கிய தொகுப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அடுத்த நாள் செய்தியாளர்கள் சென்று விசாரித்ததில் அவற்றில் சில கடைகள்தான் மீண்டும் இந்த பரிசோதனைக் கருவிகளை இருப்பில் வைத்திருந்தன.

நவம்பர் 19லிருந்து 25ஆம் தேதி வரையிலான வாரத்தின் கொவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் எண்ணிக்கை 22,094 என, அதற்கு முந்தைய வார எண்ணிக்கையான 10,726லிருந்து இரட்டிப்பாகி உள்ளதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.

இது, மற்ற காரணங்களுடன், ஆண்டிறுதி வெளிநாட்டுப் பயண காலம் என்பதாலும் பொதுமக்களிடையே எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதாலும் இருக்கலாம் என்று அமைச்சு விளக்கியது.

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், ஃபேர்பிரைஸ் மருந்துக் கடைகளின் உரிமையாளார்களான ஃபேர்பிரைஸ் குழுமம் ஏஆர்டி பரிசோதனை கருவிகள் தொகுப்புக்கான தேவை அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரட்டிப்பானதாக கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்