தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரிம ஊக்கப் புள்ளிகள்: ஒத்துழைக்க சிங்கப்பூர், பாப்புவா நியூ கினி இணக்கம்

1 mins read
a59e973f-3d38-495f-8c4f-f9433a64865f
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, பாப்புவா நியூ கினி சுற்றுப்புற, பழமைப் பாதுகாப்பு, பருவநிலை அமைச்சர் சிமோ கிலேப்பா இருவரும் இரு நாட்டு இணக்கத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். - காப் பருவநிலை 28 மாநாட்டு சிங்கப்பூர் படங்கள்

கரிம ஊக்கப் புள்ளிகள் தொடர்பான ஒப்பந்தத்தை அமல்படுத்த சிங்கப்பூரும் பாப்புவா நியூ கினியும் இணங்கியுள்ளன.

இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் பருவநிலை இலக்குகளை எட்ட இந்த ஒப்பந்தம் உதவும் என்று கூறப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தத்தில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, பாப்புவா நியூ கினி சுற்றுப்புற, பழமைப் பாதுகாப்பு, பருவநிலை அமைச்சர் சிமோ கிலேப்பா இருவரும் கையெழுத்திட்டனர்.

இதன் தொடர்பில் இரு நாடுகளும் சென்ற ஆண்டு காப் 27 பருவநிலை மாநாட்டில் இணக்க குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டது நினைவுகூரத்தக்கது.

அத்துடன், இதுவே முதன் முதலாக கையெழுத்திடப்பட்ட அமல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் என்று வர்த்தக, தொழில் அமைச்சு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை கூட்டாக வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளன. .

இந்த ஒப்பந்தம் கரிம ஊக்கப் புள்ளிகளை ஏற்படுத்துவது, அவற்றை சிங்கப்பூர், பாப்புவா நியூ கினி இரு நாடுகளும் அனைத்துலக ரீதியில் பரிமாறிக் கொள்ள ஏதுவான கட்டமைப்பு, நடைமுறைகள் ஆகியவற்றை உருவாக்குகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்