படிப்படியாக மின்சார டாக்சிகளை அறிமுகம் செய்யும் ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர்

1 mins read
25d8546c-0c57-4765-819d-70e758838f01
ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர் நிறுவனத்திடம் தற்போது ஏறக்குறைய 2,300 டாக்சிகள் உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய டாக்சி நிறுவனமான ‘ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர்’ கவர்ச்சிகரமான ஆறு புதிய மாடல் டாக்சிகளை அறிமுகம் செய்துள்ளது.

இவற்றில் 90 விழுக்காடு டாக்சிகள் மின்சாரம் மற்றும் எரிபொருளில் இயங்கும் தன்மை கொண்டவை. பல டாக்சிகள் மின்சாரத்தில் மட்டுமே இயங்கக்கூடியவை.

எஸ்எம்ஆர்டி என்ற பெயரில் இயங்கி வந்த டாக்சி நிறுவனம், கடந்த மே மாதம் பிரிமியர் டாக்சி நிறுவனத்துடன் இணைந்தது.

அதன் பிறகு ‘ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர்’ என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனத்திடம் தற்போது கிட்டத்தட்ட 2,300 டாக்சிகள் உள்ளன.

நிறுவனங்கள் இணைந்த சில மாதங்களில் டெயோட்டா கொரோலா என்னும் டாக்சிகளை அறிமுகம் செய்தது.

எரிபொருளிலும் மின்சாரத்திலும் இயங்கக்கூடிய அத்தகைய 35 டாக்சிகள் தற்போது சேவையில் உள்ளன.

தன்னிடம் தற்போது கைவசம் உள்ள டீசல் டாக்சிகளை படிப்படியாக மின்சார டாக்சியாகவும் மின்சாரம்-எரிபொருளில் இயங்கும் டாக்சியாகவும் மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதிய டாக்சிகளை ஸ்ட்ரைட்ஸ் பிரிமியர் சேவையில் இணைத்து உள்ளது.

குறிப்புச் சொற்கள்