தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பறவைக் காய்ச்சல்; ஜப்பானின் நான்கு பண்ணைகளிலிருந்து கோழி இறக்குமதிக்குத் தடை

2 mins read
590666bb-0d8c-4ff4-a34c-2e7cc0f2c0dd
நவம்பர் 25ஆம் தேதி ஜப்பானின் காஷிமா பண்ணையில் பாதுகாப்பு உடையணிந்த ஊழியர்கள் கோழிகளை கொல்லும் பணியில் ஈடுபட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பறவைக் காய்ச்சல் காரணமாக ஜப்பானில் உள்ள நான்கு பண்ணைகளிலிருந்து சிங்கப்பூருக்கு கோழி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் உணவு அமைப்பு டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் இதனை தெரிவித்தது.

சாகா, கியூஷு வட்டாரத்திலிருந்து ககோஷிமா, கன்டோ வட்டாரத்தில் உள்ள சைடாமா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படும் கோழிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக அது கூறியுள்ளது. இந்தத் தடை நவம்பர் 25, டிசம்பர் 3ஆம் தேதிக்கு இடையே அமலுக்கு வந்தது.

நவம்பர் 24ஆம் தேதி தெற்கு சாகாவில் உள்ள கோழிப் பண்ணையில் ‘எச்பிஏஐ’ பறவைக் காய்ச்சல் சம்பவம் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

நவம்பர் 27ஆம் தேதி இபராக்கியில் உள்ள பண்ணையில் மற்றொரு சம்பவம் கண்டறியப்பட்டது.

இதற்கு முன்பு ஜப்பான், 2022ல் அக்டோபரில் தொடங்கிய பருவத்தில் பறவைக் காய்ச்சலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

அப்போது இதுவரை இல்லாத அளவுக்கு 17.7 மில்லியன் கோழிகள் கொல்லப்பட்டன.

இதனால் விநியோகம் பாதிக்கப்பட்டு முட்டை, கோழி விலை அதிகரித்தது.

அது மட்டுமல்லாமல் ஏராளமான இறந்த கோழிகளைப் புதைக்க உள்ளூரில் நிலப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் உள்ளூர் அரசாங்கமும் விவசாயிகளும் தெரிவித்தனர்.

அமெரிக்கா, நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் அண்மையில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரின் தற்காலிக கோழி இறக்குமதி கட்டுப்பாடுகள் இந்த நாடுகளுக்கும் பொருந்தும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“கோழி இறைச்சி உட்பட பொதுவான உணவுகளை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதையும் அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்