ஒசாகா உலகக் கண்காட்சியில் சிங்கப்பூர் அரங்கு

ஒசாகா உலகக் கண்காட்சியில் சிங்கப்பூர் அரங்கு

1 mins read
3d20df5f-21c9-44cf-a282-fc39f16ecdd0
ஒசாகா உலகக் கண்காட்சி 2025 ஏப்ரலில் தொடங்கி ஆறு மாதங்கள் நடைபெற உள்ளது. - படம்: ஏஎஃப்பி

ஜப்பானில் நடைபெறும் ஒசாகா உலகக் கண்காட்சிக்கான அரங்குகளை கட்ட இருக்கும் முதல் நாடுகளில் சிங்கப்பூர் இடம்பெற்று உள்ளது.

அந்தக் கண்காட்சி 2025 ஏப்ரலில் தொடங்கி ஆறு மாதங்களுக்கு நடைபெறும். சிங்கப்பூர் அரங்கைக் கட்டுவதற்கான பணிகள் 2024 ஜனவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சிங்கப்பூர் பயணக் கழகத்தின் உலகக் கண்காட்சி மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான நிர்வாக இயக்குநர் கேரி குவிக், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார்.

கட்டுமானத்திற்கான அனுமதியை சிங்கப்பூர் பயணக் கழகத்திற்கு ஒசாகா நகர நிர்வாகம் டிசம்பர் 1ஆம் தேதி வழங்கியது.

60க்கும் மேற்பட்ட நாடுகளும் வட்டாரங்களும் தங்களது சொந்த அரங்கைக் கட்டுவதற்கான பணியில் தாமதம் ஏற்பட்டது. முன்னதாக, 2023 ஜூலையில் அந்தப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்