$7.50 க்கு பதில் $750 அனுப்பிய வாடிக்கையாளரைத் தேடும் கடை உரிமையாளர்

$7.50 க்கு பதில் $750 அனுப்பிய வாடிக்கையாளரைத் தேடும் கடை உரிமையாளர்

1 mins read
5522e191-8520-43fe-8ffc-05d10ed8f1e3
திங்கட்கிழமை தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ‘நெட்ஸ்’ பரிவர்த்தனை மூலம் 7.50 வெள்ளி செலுத்துவதற்கு பதில் தவறுதலாக 750 வெள்ளி செலுத்தியுள்ளார் என்று விக்டர் இங் தெரிவித்தார். - படம்: விக்டர் இங்

லக்கி பிளாசாவில் உள்ள உணவங்காடி நிலையத்தில் செயல்படும் ‘வேங் பூ ரோஸ்டட் டிலைட்’ கடை உரிமையாளர் விக்டர் இங் தற்போது சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைப் பெற்றுவருகிறார்.

திங்கட்கிழமை தனது கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ‘நெட்ஸ்’ பரிவர்த்தனை மூலம் 7.50 வெள்ளி செலுத்துவதற்கு பதில் தவறுதலாக 750 வெள்ளி செலுத்தியுள்ளார்.

கடையின் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கும் போது வாடிக்கையாளர் 750 வெள்ளி அனுப்பியதை உணர்ந்தார் விக்டர்.

உடனடியாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டார் விக்டர். வாடிக்கையாளருக்கு அப்பணத்தைத் திரும்பி கொடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமது கடை ஊழியர்களுக்கும் தமக்கும் யார் அந்த வாடிக்கையாளர் என்று சரியாக நினைவில்லை என்றும் கூறினார்.

பணத்தைத் திரும்பி அனுப்ப ‘நெட்ஸ்’ஐ விக்டர் தொடர்புகொண்டார். பணத்தை அனுப்ப ஏழு நாள்கள் காத்திருக்க வேண்டும் என்று ‘நெட்ஸ்’ கூறியது.

இதற்கு இடையே அந்த வாடிக்கையாளரை சமூக ஊடகம் வழி கண்டுபிடிக்க களமிறங்கிவிட்டார் விக்டர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்