தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோக்கியோவுக்குப் பயணமாகிறார் பிரதமர் லீ சியன் லூங்

1 mins read
93e24162-0670-4825-ab7e-48389c8c62af
பிரதமர் லீ சியன் லூங். - படம்: சாவ் பாவ்

பிரதமர் லீ சியன் லூங், ஆசியான்-ஜப்பான் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பைக் குறிக்கும் 50ஆம் ஆண்டு நிறைவு உச்சநிலைக் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

பிரதமருடன் திருமதி லீ, வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளுடன் செல்கின்றனர்.

உச்சநிலைக் கூட்டத்தில், ஆசியானும் ஜப்பானும் மின்னிலக்கம், பசுமைப் பொருளியல்கள் போன்றவற்றில் தங்களுக்கிடையிலான பங்காளித்துவத்தை வலுப்படுத்தும் வழிவகைகள் குறித்து விவாதிக்கும். மேலும் நாட்டுத் தலைவர்கள் வட்டார மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிப்பதுடன் தங்களுக்கிடையே பரஸ்பர அக்கறைக்குரிய செயல்பாடுகள் குறித்தும் பேசுவார்கள்.

தமது ஜப்பானிய் பயணத்தின்போது பிரதமர் லீ, ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடனும் இதர ஜப்பானிய பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.

பிரதமர் லீ நாடு திரும்பும் வரை, மூத்த அமைச்சரும் பேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தற்காலிக பிரதமராகச் செயல்படுவார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்