தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் சூரியசக்தித் திட்டத்தைப் பெற்றது செம்ப்கார்ப்

1 mins read
9b4836db-380b-4387-8f04-78c2b261d219
‘செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரிஸ்’ 300 மெகாவாட் சூரியசக்தித் திட்டத்தைப் இந்திய அரசு நிறுவனமான என்எச்பிசியிடம் இருந்து பெற்றுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்  

‘செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரிஸ்’ நிறுவனம், 300 மெகாவாட் சூரியசக்தித் திட்டத்தை இந்திய அரசு நிறுவனமான என்எச்பிசியிடம் இருந்து பெற்றுள்ளது என்று வியாழக்கிழமை அது கூறியது.

சுயமாக செயல்படும் இத்திட்டம், செம்ப்கார்ப்பின் துணை நிறுவனமான ‘கிரீன் இன்ஃபிரா விண்ட் எனர்ஜி’யால் நடத்தப்படும்.

இத்திட்டம், உள் நிதி மற்றும் கடன் மூலம் நிதியளிக்கப்பட்டு 2026இல் வணிக ரீதியாக செயல்படத் தயாராக இருக்கும்.

அண்மைய திட்டத்தைச் சேர்த்து, இந்தியாவில் செம்ப்கார்ப்பின் மொத்த புதுப்பிக்கத்தக்க தொகுப்பு 3.7 கிகாவாட் அளவை எட்டும். உலகளவில் அதன் மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 13 கிகாவாட் அளவாக உயரும்.

டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டில், ஒரு பங்கின் வருவாயிலும் பங்கு ஒன்றின் நிகர உறுதியான சொத்துகளிலும் எந்தவிதமான தாக்கத்தையும் இத்திட்டம் ஏற்படுத்த வாய்ப்பில்லை என செம்ப்கார்ப் கருதுகிறது.

குறிப்புச் சொற்கள்