தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சரிவு

2 mins read
528c14e0-774d-457e-9ebc-39dddf2f3ddb
ரிங்கிட்டுக்கு நிகரான வெள்ளியின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு புதன்கிழமை (டிசம்பர் 13) S$1க்கு 3.53 ரிங்கிட் என்ற அளவை எட்டியது.

அடுத்த நாளான வியாழக்கிழமை S$1க்கு 3.51 ரிங்கிட் என்று அளவாக அது சற்றே குறைந்தது. எனினும், கடந்த சில மாதங்களில் இருந்ததைவிட ரிங்கிட்டின் மதிப்பு வலுவிழந்துள்ளது.

ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அக்டோபர் 24ஆம் தேதி உச்சம் தொட்டதைத் தொடர்ந்து, பரிவர்த்தனை விகிதம் S$1க்கு 3.50 ரிங்கிட்டுக்கு சற்று குறைவாகவே இருந்து வந்துள்ளது.

நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் ரிங்கிட் 3.51 என்ற அளவை எட்டிய பின்னர், அது வழக்கமான நிலைக்குத் திரும்பியது.

இந்நிலையில், ரிங்கிட்டுக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு கடந்த புதன்கிழமை புதிய உச்சம் தொட்டது. XE இணையப்பக்கத்தைப் பொறுத்தவரை, S$1க்கு 3.53 ரிங்கிட் என்ற அளவை எட்டியது.

டிசம்பர் பள்ளி விடுமுறையின்போது சிங்கப்பூர் வெள்ளிக்குச் சாதகமாக பரிவர்த்தனை விகிதம் இருப்பதால், மலேசியாவுக்குச் சென்றுவரும் சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு அன்றாடம் ஜோகூர் திரும்பும் மலேசியர்களுக்கும் நற்செய்தியாக உள்ளது.

அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்ய சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு முக்கியப் பங்கு வகிப்பதாக பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ரிங்கிட்டுக்கு நிகரான வெள்ளியின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்துள்ள போதிலும், சில அம்சங்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நிலவரம் மாறலாம் என்று ‘டாலர்ஸ் அண்ட் சென்ஸ்’ இணையப்பக்கம் குறிப்பிட்டது.

எடுத்துக்காட்டாக, சீனப் பொருளியல் வளர்ச்சி கண்டு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால், ரிங்ட்டின் மதிப்பு சற்று மீட்சி அடையலாம் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்