விவாதிப்புக் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் போத்தல்கள், சாப்பாட்டுக்குப் பின் வீசி எறியப்படக்ககூடிய பொருள்கள், நீர்ப்பாசனம், கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் குடி தண்ணீர் ஆகியவற்றை நீக்குவதே பொதுத் துறையின் முன்னுரிமைப் பணி என்று கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட சில வழிகள் மூலம் சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மையை மேம்படுத்தலாம் என்று பொதுத் துறை கோடி காட்டியுள்ளது.
இதை கிரீன்கவ்.எஸ்ஜி அமைப்பின் பொதுத் துறை தெரிவித்தது. அதன் தொடர்புடைய அமைப்புகளான அலுவலகக் கட்டடங்கள், சுகாதார பராமரிப்பு நிலையங்கள், பள்ளிகள், பொதுப் பயனீட்டுக் கழக எழுப்பிய நிர்மாணங்கள், பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் கரிம வெளியீடு, அவை பயன்படுத்தும் மின்சாரம், தண்ணீர் குறித்தும் அறிக்கை விரிவாக கூறியுள்ளது.
இந்த அறிக்கையை வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூர் பலதுறை தொழில்கல்லூரியில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் பே யாம் கெங் வெளியிட்டார்.
இந்த அறிக்கை 2050ஆம் ஆண்டு கரிம வெளியேற்றமே இல்லாத தேசிய இலக்கை எட்ட நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 2045ஆம் ஆண்டிலேயே, எட்ட எண்ணம் கொண்டுள்ளது.
இதற்கு ஏதுவாக, தண்ணீர், மின்சாரப் பயன்பாடு ஆகியவற்றுடன் கரிம வெளியேற்றத்தையும் அமைப்பின் அறிக்கை கண்காணித்து வருகிறது.
இந்த சுற்றுப்புற நீடித்த நிலைத்தன்மை தொடர்பான அறிக்கை தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, 2021ஆம் ஆண்டின் மொத்த கரிம வெளியேற்றத்தில் பொதுத் துறையின் பங்கு 7.2 விழுக்காடு என்று தெரிய வந்துள்ளது.
ஆகக் கடைசியாக, 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, பொதுத் 3.7 மில்லியன் டன் கரிமத்தை வெளியேற்றியுள்ளது, இது 2020ஆம் ஆண்டின் கரிம வெளியேற்றத்தைவிட 5.3 விழுக்காடு குறைவு என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், கரிம வெளியேற்றம் 2025ஆம் ஆண்டு உச்சத்தைத் தொடும் என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் கொள்ளைநோய் காலத்துக்குப் புன் பல நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குகின்றன. அத்துடன், போக்குவரத்து, சுகாதார பராமரிப்பு, பயனீட்டு வசதிகள் போன்ற பெரிய அளவிலான பொதுக் கட்ட்மைப்புகள் எதிர்வரும் ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளதால் கரிம வெளியேற்றம் உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

