தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட்டுகளை விற்றதாக சந்தேக நபர் கைது

1 mins read
f2778830-410f-4d2f-a5a9-fcf120b03565
$17,000 மதிப்புள்ள மின்சிகரெட், உபகரணங்களை சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தகவல் பரிமாற்றத் தளமான டெலிகிராம் வழியாக மின்சிகரெட்டுகளை விற்ற 36 வயது சந்தேக நபரைக் கைது செய்ததில் 17,000 வெள்ளிக்கும் மேற்பட்ட மதிப்புடைய புகைக்கும் கருவிகளும் கைப்பற்றப்பட்டன.

டிசம்பர் 12ஆம் தேதி சூவா சூ காங், அவென்யூ 7ல் சுகாதார அறிவியல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேக நபர் பிடிபட்டார் என்று டிசம்பர் 16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆணையம் தெரிவித்தது.

சூவா சூ காங் அவென்யூ 7ல் ஒருவர் மின்சிகரெட்டுகளை விற்பதாக ஆணையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆணையம் அவ்வட்டாரத்தைக் கண்காணித்து வந்தது. பின்னர் சந்தேக நபரின் வீட்டை அது அதிரடியாகச் சோதனையிட்டது.

அந்தச் சோதனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சிகரெட்டுகளும் அதற்குரிய உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் மதிப்பு $17,000 என்று ஆணையம் கூறியது.

இவற்றையெல்லாம் கைப்பற்றி, சந்தேக நபரை ஆணையத்தில் அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் மின்சிகரெட்டுகளையும் அதன் உபகரணங்களையும் இறக்குமதி செய்வது, விநியோகிப்பது, மற்றும் விற்பது சட்டப்படி குற்றமாகும் என்று ஆணையம் நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்