தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவை வழங்கியதாக பெண்கள் மூவர் கைது

1 mins read
deb066de-2c79-4948-8019-d300d5428da0
கைது செய்யப்பட்ட பெண்கள் 27வயதுக்கும் 46வயதுக்கும் இடைப்பட்டவர்கள். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவை வழங்கியதாகக் கூறப்படும் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 27வயதுக்கும் 46வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

நவம்பர் 29, டிசம்பர் 12ஆம் தேதிகளில் ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1லும் ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21லும் இயங்கும் உடற்பிடிப்பு நிலையங்களில் காவல்துறையினர் நடத்திய அமலாக்கச் சோதனையின்போது கைது நடவடிக்கை இடம்பெற்றது.

பல்வேறு குற்றங்களில் சம்பந்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் உடற்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் நால்வரும் பெண்கள் மூவரும் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

இரண்டு உடற்பிடிப்பு நிலையங்கள் உரிமமின்றி செயல்பட்டது கண்டறியப்பட்டது. உரிமம்பெற்ற மற்ற இரு உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் நடவடிக்கைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

கிளமெண்டி காவல்துறைப் பிரிவும் குற்றவியல் புலனாய்வுத் துறையும் இணைந்து அமலாக்கச் சோதனையில் ஈடுபட்டன.

ஜூரோங் ஈஸ்ட்டில் உடற்பிடிப்பு நிலையங்கள் அதிகரித்து இருப்பது குறித்து குடியிருப்பாளர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்