மானபங்கம்: இழப்பீடு தந்த மருத்துவரின் வழக்கு தள்ளுபடி

1 mins read
41122820-6d61-4aa9-abba-473aaa21e761
இழப்பீட்டைப் பாதிக்கப்பட்ட பெண் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: தமிழ் முரசு

மரினா பே சேண்ட்ஸில் பெண் ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு கொடுத்ததை அடுத்து, அவருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

35 வயது டாக்டர் தீரஜ் பிரேம் தியாதானி மீது இந்தக் குற்றச்சாட்டில் மீண்டும் வழக்கு தொடுக்க முடியாது.

சட்டத்தின்கீழ், காயம் விளைவித்தல், மானபங்கம் போன்ற ஒருசில குற்றங்கள் தொடர்பாக மட்டுமே பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கொடுத்து தீர்வு காண முடியும்.

இதற்கு பாதிக்கப்பட்டவரின் சம்மதம் தேவை.

சிங்கப்பூரரான டாக்டர் கியாதானி, கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதியன்று அதிகாலை 3 மணி அளவில் மரினா பே சேண்ட்ஸ் அவென்யூ ஓய்விடத்தில் அப்பெண்ணை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

டாக்டர் கியாதானி ரிவர் வேலி சாலையில் உள்ள மருத்துவ நிலையம் ஒன்றில் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்