பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் அதிலிருந்து விடுவிப்பு

பெண்ணை மானபங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் அதிலிருந்து விடுவிப்பு

1 mins read
b0ee5030-5b48-4720-bed3-ea840f26a9c9
படம்: - தமிழ் முரசு

மரினா பே சேண்ட்ஸில் உள்ள ஓர் ஓய்விடத்தில் மருத்துவர் தீராஜ் பிரேம் கியாட்டாணி, 35, ஜூன் 25ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்பட்டிருந்தது.

ஆயினும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவர் இழப்பீடு வழங்கியதால் திங்கட்கிழமை (டிசம்பர் 18) மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கில் சமரசம் செய்துகொள்ளப்பட்டது.

அப்படியென்றால், அவர் அதே குற்றத்திற்கு மீண்டும் குற்றம் சாட்டப்பட முடியாது.

சட்டத்தின்கீழ் புண்படுத்துதல், மானபங்கம் செய்தல் போன்ற சில குற்றங்கள் மட்டுமே இவ்வாறு மாவட்ட நீதிமன்ற வழக்கில் சமரசம் செய்துகொள்ளப்படும்.

இவ்வழக்கின் உண்மைகளையும் பாதிக்கப்பட்டோரின் சூழ்நிலையையும் மதிப்பாய்வு செய்த பின்னர், வழக்கை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க அரசுத் தரப்பு முடிவு செய்தது என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்