தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருமண முறையில் கத்தோலிக்கத் தேவாலயங்களில் மாற்றமில்லை

1 mins read
d4056620-98db-4889-9b76-6c6c798b8f04
போப் பிரான்சிஸ். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

ஒரு பாலினத் தம்பதியினரை கிறிஸ்துவ குருமார்கள் ஆசிர்வதிக்க வத்திகன் அனுமதி அளித்திருப்பது கத்தோலிக்க தேவாலயங்கள் பாரம்பரிய திருமண முறையில் மாற்றம் செய்ததாகப் பொருள்படாது என்று சிங்கப்பூர் கிறிஸ்துவப் பேராயர் விளக்கி உள்ளார்.

திருமண பிரகடனம் மீதான கவனம் ஒரு பாலினத் தம்பதியினரை ஆசிர்வதிப்பதன் அடிப்படையில் அல்ல என்று டிசம்பவர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கார்டினல் வில்லியம் கோ குறிப்பிட்டு உள்ளார்.

தேவாலயத்தின் அதிகாரபூர்வ ஆசிர்வாதத்திற்கும் கிறிஸ்துவ குருமார்கள் எனப்படும் ஆயர்கள் வழங்கும் ஆசிர்வாதத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

ஒருபாலினத் தம்பதியினரை ஆயர்கள் ஆசிர்வதிக்க போப் பிரான்சிஸ் அனுமதி அளித்துள்ளதாக டிசம்பர் 18ஆம் தேதி வத்திகன் தெரிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்