டோட்டோ முதல் பரிசு $10 மில்லியனாக அதிகரிப்பு

டோட்டோ முதல் பரிசு $10 மில்லியனாக அதிகரிப்பு

1 mins read
கடந்த மூன்று குலுக்கல்களில் வெற்றியாளர் இல்லை
c0e9caed-a4a0-4a94-8c4c-6479ad24e78f
லோரோங் 1 தோ பாயோவில் உள்ள சிங்கப்பூர் பூல்ஸ் கிளை. - படம்: சாவ் பாவ்

வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறும் டோட்டோ குலுக்களுக்கான முதல் பரிசுத் தொகை $10 மில்லியனாக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று குலுக்கல்களில் முதல் பரிசை எவரும் வெல்லாத நிலையில், பரிசுத் தொகை அதிகரித்துள்ளது.

கடந்த குலுக்கல்களில் முதல் பரிசுத் தொகை $1.2 மில்லியனிலிருந்து $2.78 மில்லியனாகவும் பின்னர் $5.61 மில்லியனாகவும் கூடியது.

திங்கட்கிழமை (டிசம்பர் 18) நடந்த கடைசி டோட்டோ குலுக்கலில் இரண்டாம் பரிசை (Group 2) நான்கு பேர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் $148,395 பரிசுத் தொகையை வென்றனர்.

அந்த நான்கு குலுக்கல் சீட்டுகளும் ‘சிஸ்டம் 7’ வகையைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்று இணையத்தில் வாங்கப்பட்டது.

மற்ற மூன்று குலுக்கல் சீட்டுகளும் என்டியுசி ஃபேர்பிரைஸ் புக்கிட் பாத்தோக் எம்ஆர்டி நிலையம், என்டியுசி ஃபேர்பிரைஸ் ‘வேர்ஹவுஸ் கிளப் @ ஜூ கூன்’, புளோக் 211 ஹவ்காங் ஸ்திரீட் 21ல் உள்ள சிங்கப்பூர் புல்ஸ் கிளையில் விற்கப்பட்டன.

‘சிஸ்டம் 7’ குலுக்கல் சீட்டின் விலை $7. அது ஏழு சாதாரண குலுக்கல் சீட்டுகளுக்குச் சமம்.

பொதுவாக மாலை 6.30 மணிக்கு நடைபெறும் டோட்டோ குலுக்கல், வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்