கவனமில்லாமல் வாகனம் ஓட்டி மனைவி இறக்க காரணமாக இருந்த கணவர்

1 mins read
a77c846e-950b-437e-b34a-061bf8dbcd7b
படம்: - ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முகம்மது சாகித் அப்துல் கஃபார் என்னும் 30 வயது ஆடவர், தெம்பனீஸ் விரைவுச் சாலையில் கவனமில்லாமல் மோட்டர் சைக்கிள் ஓட்டி தமது மனைவி இறக்கக் காரணமாக இருந்ததாக புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

சாகித் மோட்டர் சைக்கிள் ஓட்டிய போது அவரது மனைவி யாஸ்மின் அப்துல்லா(26) பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

இருவருக்கும் திருமணமாகி 3 வாரங்களில் அந்த விபத்து நடந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

விபத்து பிப்ரவரி 20ஆம் தேதி நடந்தது. காலை 8 மணியளவில் தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் தெம்பனீஸ் விரரைவுச் சாலையில் தம்பதி பயணம் செய்தது.

அப்போது சாகித் கவனமில்லாமல் வாகனத்தை ஓட்டி சிறுபேருந்து ஒன்றுமீது மோதினார்.

அதில் படுகாயமடைந்த யாஸ்மின் மரணமடைந்தார்.

சாகித் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 19ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கவனமில்லாமல் வாகனம் ஓட்டி மற்றோரு நபர் இறக்க காரணமாக இருப்பவருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 10,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்