சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இணையத்தின் வழி சிலர் வாங்கிவருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை முதல் மின்சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கும் அதை வைத்திருப்பவர்களுக்கும் 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மின்சிகரெட்களை நாட்டிற்குள் கொண்டுவராமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

