கிறிஸ்துமசுக்கு முன் சிஓஇ கட்டணங்களில் சரிவு

கிறிஸ்துமசுக்கு முன் சிஓஇ கட்டணங்களில் சரிவு

1 mins read
93cc0430-265c-4a49-b66f-d8bac74f5b6e
சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $85,000 ஆகவும் பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $110,001 ஆகவும் பதிவானது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன உரிமைச் சான்றிதழுக்கான (சிஓஇ) 2023ஆம் ஆண்டின் இறுதி ஏலக் குத்தகையில் அனைத்துப் பிரிவுகளிலும் கட்டணங்கள் சரிந்தன.

சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $88,020லிருந்து $85,000க்குக் குறைந்தது. பெரிய கார்களுக்கான சிஓஇ கட்டணம் $130,100லிருந்து $110,001க்கு இறங்கியது.

பொதுப் பிரிவுக்கான சிஓஇ கட்டணம் $133,388லிருந்து $118,388க்குக் குறைந்தது. இந்தப் பிரிவின் சிஓஇ கட்டணம், மோட்டார் சைக்கிள் தவிர மற்ற எல்லா வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் பெரிய சக்திவாய்ந்த கார்கள்தான் இந்தப் பிரிவின் சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும்.

வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ கட்டணம் $71,001லிருந்து சரிந்து $69,423 என்று பதிவானது. மோட்டார் சைக்கிளுக்கான சிஓஇ கட்டணம் $9,858லிருந்து $9,002க்கு இறங்கியது.

சிஓஇ கட்டணம் $158,004 என்ற உச்சத்தைத் தொட்டதிலிருந்து அக்டோபர் மாதம் முதல் சிஓஇ கட்டணங்கள் மெல்ல சரிய தொடங்கின.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் மோட்டார் காட்சிக்குப் பிறகு சிஓஇ கட்டணங்கள் மீண்டும் ஏறுமுகமாக இருக்கும் என்று வாகனத் தொழில்துறை கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.