நிக்கல் நெடுஞ்சாலையில் விபத்து; சைக்கிளோட்டி மரணம்

1 mins read
e39a4e78-e67f-46ff-a01c-dfda9a863281
இதில் சம்பந்தப்பட்ட காரோட்டியான 33 வயது ஆடவர், விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டார்.  - படம்: இணையம்

நிக்கல் நெடுஞ்சாலையில் டிசம்பர் 19ஆம் தேதி காலையில் மோதிவிட்டு தப்பியோடிய சம்பவத்தில் சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு டிசம்பர் 20ஆம் தேதி பதிலளித்த காவல்துறை, அந்த 45 வயது சைக்கிளோட்டி மயக்கநிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் பின்னர் அவர் மரணமுற்றார் என்றும் தெரிவித்தது.

படுகாயமுற்ற சைக்கிளோட்டி டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

டிசம்பர் 19ஆம் தேதி, குலிமார்ட் ரோட்டை நோக்கிச் செல்லும் நிக்கல் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு காரும் ஒரு சைக்கிளும் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி காலை 5.07 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.

இதில் சம்பந்தப்பட்ட காரோட்டியான 33 வயது ஆடவர், விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் சென்றுவிட்டார்.

அவர் பின்னர், ஆபத்தான முறையில் காரோட்டி, மரணம் விளைவித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். காவல்துறையின் புலனாய்வு தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்