அனைத்துலக இணைய வர்த்தக விதிமுறைகள் தொடர்பில் இணக்கம்

ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தை. அதைத் தொடர்ந்து இணைய வர்த்தக விதிமுறைகளில் புதிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்க இணக்கம் ஏற்பட்டது.

இதனால், உலக மின்னிலக்கப் பொருளியல் கூடுதல் நம்பகத்தன்மையுடனும் செயல்திறனுடனும் விளங்கும் என்று கூறப்படுகிறது.

உலக வர்த்தக நிறுவனத்தின் முயற்சியில் ஏற்பட்ட இந்தப் புதிய ஏற்பாடு உலக வர்த்தகத்தில் பல துறைகளுக்கு இடையிலான மின்னிலக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அது ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகளை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வர்த்தகத்தை எளிமைப் படுத்துதல், வெளிப்படையான மின்னிலக்க சூழல், வர்த்தக, வாடிக்கையாளர் நம்பகத்தன்மை ஆகிய மூன்று பரந்த பிரிவுகளில் பல விதிமுறைகள் தொடர்பாக டிசம்பர் 20ஆம் தேதி பெருமளவு இணக்கம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலக வர்த்தக நிறுவனத்தின் இந்த முயற்சியை அடுத்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டறிக்கை மூலமாக இதைத் தெரிவித்துள்ளன.

“ஜேஎஸ்ஐ எனப்படும் இந்தத் திட்டம் ஒரு முக்கியமான மைல்கல்.

“இது குறித்த பேச்சுவார்த்தையை ஒரு காலகட்டத்துக்குள் 2024ஆம் ஆண்டு முடிக்க எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று அந்த மூன்று நாடுகளும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித்தன.

இந்தப் பேச்சுவார்த்தையில் உலகின் மூன்று பெரிய பொருளியல்களான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா ஆகியவையும் கலந்துகொண்டன.

இது குறித்து கருத்துரைத்த சிங்கப்பூரின் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், “இந்தப் புதிய விதிகள் அரசாங்கங்கள், வர்த்தகங்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு முக்கியமான வர்த்தக மதிப்பைக் கொண்டு வரும். மேலும் இது பங்கேற்பாளர்களை உலகளாவிய மின்னிலக்க பொருளியலுடன் இணைய வழி வகுக்கும்.

“முக்கியமாக, சிங்கப்பூரை பொறுத்தவரை, விதி சார்ந்த பலதரப்பு வர்த்தக முறையின் வலுவான ஆதரவாளர் என்ற முறையில் அது நம்பகத்தன்மைக்கும் ஆற்றலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் உலக வர்த்தக நிறுவனத்துக்கு ஒரு நேர்மறையான சமிக்ஞையை அனுப்பும்,” என்றார்.

உலக வர்த்தக நிறுவனம் 164 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு, நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விதிமுறைகளை வகுக்கிறது. இதன் பயனாக பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகள், சேவை வழங்கும் நாடுகள், ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகள் யாவும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட, அமல் செய்யப்படக்கூடிய சட்ட அமைப்பின்கீழ் வர்த்தகம் மேற்கொள்ள முடிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!