டர்ஃப் சிட்டி வர்த்தகங்களில் 75% இடத்தைக் காலி செய்தன

டர்ஃப் சிட்டி வர்த்தகங்களில் 75% இடத்தைக் காலி செய்தன

1 mins read
1069de11-2eee-42a9-ac3f-6c4f87045870
டர்ஃப் சிட்டியில் இருப்போர் புதிய இடத்திற்கு மாறிக்கொள்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் தீமா வட்டாரத்தில் உள்ள டர்ஃப் சிட்டி பகுதியைக் காலி செய்வதற்கான இறுதிக்கெடு டிசம்பர் 31 நெருங்கி வரும் நிலையில் அங்கு இருந்த முக்கால்வாசி வர்த்தகங்கள் புதிய இடங்களை அடையாளம் கண்டுவிட்டன.

புதிய குடியிருப்பு வசதிகளுக்காகவும் எம்ஆர்டி நிலையத்திற்காகவும் அந்தப் பகுதி அரசாங்கத்திற்குத் தேவைப்படுகிறது.

2023ஆம் ஆண்டு கடந்த பின்னர் எந்தவொரு வர்த்தகத்திற்கும் அங்கு இருப்பதற்கான காலம் நீட்டிக்கப்படாது என்று அதிகாரிகள் இதற்கு முன்னர் தெளிவாகத் தெரிவித்து இருந்தனர்.

இருப்பினும், ஒரே ஒரு வர்த்தகர் மட்டும் வெளியேற கூடுதல் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

குதிரையோட்ட வர்த்தகத்தை நடத்தும் புளூ டால்ஃபின் கேலரி என்னும் அந்த நிறுவனத்திற்கு 2024 மார்ச் 31 வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதுவரை அந்நிறுவனம் தனது 150 குதிரைகளை டர்ஃப் சிட்டியில் தொடர்ந்து வைத்திருக்கலாம்.

குறிப்புச் சொற்கள்