$7,600க்கு வாடகைக்கு விடப்பட்ட 5-அறை வீவக வீடு

$7,600க்கு வாடகைக்கு விடப்பட்ட 5-அறை வீவக வீடு

1 mins read
926800ba-d733-40ac-aaa2-598b1a560f5e
படம்: - ஷின் மின் நாளேடு
Google News Preferred Icon

புளோக் 2 தஞ்சோங் பகார் பிளாசாவில் உள்ள ஐந்தறை வீடு ஒன்று சென்ற மாதம் (நவம்பர்) $7,600க்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் (வீவக) பதிவேட்டில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

வீவக அடுக்குமாடி வீடு ஒன்றின் மாத வாடகை $7,000க்குமேல் பதிவாகியிருப்பது இது இரண்டாவது முறை.

செப்டம்பரில் ‘ஓல்டு ஏர்போர்ட் ரோட்டிற்கு’ அருகில் உள்ள 11 பைன் குளோசில் ஐந்தறை வீடு ஒன்று மாதம் $7,400க்கு வாடகைக்கு விடப்பட்டது.

தற்போது தஞ்சோங் பகாரில் வாடகைக்கு விடப்பட்டுள்ள வீடு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஷின் மின் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.

$7,600க்கு வாடகைக்கு விடப்பட்ட வீடு 1,300 சதுர அடி பரப்பளவு கொண்டது என்றும் அருகருகே இருந்த இரண்டு மூவறை வீடுகளை இணைத்து உருவாக்கப்பட்ட அவ்வீட்டில் நான்கு அறைகள், இரண்டு வரவேற்பறைகள், இரண்டு சமையலறைகள், இரண்டு கழிப்பறைகள் உள்ளதாகவும் குடியிருப்பாளர் ஒருவர் கூறியதாக அந்நாளேடு குறிப்பிட்டது.

புளோக் 2 தஞ்சோங் பகார் பிளாசாவில் மொத்தம் 200 வீடுகள் இருப்பதாகவும் அவற்றில் 10 ஐந்தறை வீடுகள் என்றும் சொத்து முகவர் நிறுவனமான எட்ஜ்ப்ரோப் குறிப்பிட்டது.

தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலையத்திலிருந்து 4 நிமிட நடைத்தொலைவில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி வீட்டிற்கு அருகில் மூன்று பேரங்காடிகளும் மூன்று கடைத்தொகுதிகளும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்